Thirunallaru pradhosha vazhipadu

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத தேய்பிறை  பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் தை மாத தேய்பிறை  பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மகாதீபாராதனை இன்றிரவு நடைபெற்றது.

மஞ்சள்,பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. தை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *