soorya horai pongal

தை திருநாளின் முதல் நாளான பொங்கலன்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறோம். இதுவே தமிழர்களின் மரபு. எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்? செல்வம் குவியும் என ஆரூடர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி. சூரியனை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும் என சாத்திரம் கூறுகிறது. எனவே சூரிய பொங்கலன்று சூரிய ஓரையில் பொங்கல் இட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

நல்ல நேரத்திற்குள் பொங்கல் செய்துவிட்டு, பிறகு வடை, பாயாசம் மற்றும் 21 வகையான சமைத்த காய்கறிகளையும், 21 வகையான சமைக்காத காய்கறிகளையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு ஆகியவற்றையும் வைத்து சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரிய ஓரையில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் தேடி வரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சூரிய பகவானின் ஆசிர்வாதமும் அருளும் இந்த சூரிய ஓரையில் பரிப்பூரனமாக கிடைக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *