Dhanusu January Monthly Prediction – 2023

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூரியன், புதன்(வ) – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் (வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

08-01-2023 அன்று ராசியில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

13-01-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

15-01-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  B2

23-01-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:

எந்த ஒரு சிறிய விஷயத்தையும் கவனமாக  கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலை பளு குறையும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

மூலம்:

இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பூராடம்:

இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

உத்திராடம்:

இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
சந்திராஷ்டம தேதி: 8, 9
அதிர்ஷ்ட தேதி: 1, 2, 28, 29

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *