Kallukuzihi anjaneyar vadai malai

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சியில் பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது – பெருந்திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

அனுமன் ஜெயந்தியான இன்று விரதமிருந்து ராமநாமம் ஜெபித்து அனுமனை வழிபடுபவர்களுக்கு சஞ்சலங்கள் விலகி, சகல செல்வங்களும் பொங்கி பெருகும் என்பதும்,  சனிப்பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வந்தால் சகல சங்கடங்களும் நீங்கும் என்பதும் ஐதீகம்.

அனுமன் ஜெயந்தியை யொட்டி திருச்சியில் பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் முலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உற்சவர் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது .பின்னர் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது .

அதனைத்தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க லட்சார்த்தனையும், ராமபாராயணமும் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள்நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசித்தனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *