Kacchapeswarar koil thiruvizha

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர, மாவினால் அகல் விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து இருந்தது.மேலும்  கடந்தாண்டு ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.அதேபோல் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடித்து வழிபட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டு ஆண்டுகள் கழித்து எவ்வித கொரோனா கட்டுப்பாடுகளின்றி கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொண்டனர். இம்மாதம்  27ந் தேதியும், டிசம்பர் மாதம் 4 , 11 மற்றும் 15 தேதிகளில் கடை ஞாயிறு விழா நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *