Ranipettai Ayappan koil kumbabishegam

ராணிப்பேட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ சபரி சாஸ்தா பூஜா சமிதியின் அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆலயத்தில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில்  ராணிப்பேட்டை அருகே இருக்கும் பாலாற்ற கரையிலிருந்து 101 குடங்களில் புண்ணிய தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஜலத்தை மேல தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு பின்னர் கனமழையை பொறுப்பெடுத்தாமல் கோவில் மேல் இருக்கும் கலசத்திற்கு பூஜை செய்யப்பட்டு கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் விழாவானது நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவின்போது திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கூட பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷங்களை எழுப்பி பக்தி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *