maruthur ayyanar koil vrushabishegam

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவில்  வருஷபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகரில் பாவாலி சாலை மார்க்கமாக  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் அய்யனார் சுவாமி ஶ்ரீ விநாயகர் பெருமான் ஸ்ரீ சன்னாசி சுவாமி ஸ்ரீ பெரிய கருப்பு சுவாமி ஸ்ரீ லாடன் ஸ்வாமி ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி ஸ்ரீ இருளப்ப சுவாமி ஸ்ரீ இருளாயி சுவாமி ஶ்ரீ  பேச்சியம்மன் ஸ்ரீ ராக்காச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் தனித்தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் புணரமைத்து   கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னிட்டு முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமி சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கின.

தொடர்ந்து பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து மகா பூர்ணா குதி அளிக்கப்பட்டன பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடன் புறப்பாடு நடைபெற்று அனைத்து தெய்வங்களுக்கும் பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன நிறைவாக சிறப்பு அலங்காரம் செய்து உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன இதனை அடுத்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *