Sukra horai selvam kuviya

அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும். வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று வீட்டில் சத்திய நாராயண பூஜை தொடர்ந்து செய்ய செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மஹாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும். தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ணம் ஆகர்ஷணமாகும்.

மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும். ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும். மஹாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும். சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும். வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும். தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பண வரத்து கிடைக்கும். தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.

சொர்ணாகர்ஷண பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *