Puratasi pandurangan koil

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவில் புரட்டாசி மாத சனிக்கிழமை திருநாள் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி தாயார் சமேத ஶ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை திருநாளையொட்டி சிறப்பு திருமஞ்சனம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் ரகுமாயி பாண்டுரங்கன் பெருமாளுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து நட்சத்திர தீபம் கும்ப தீபம் மற்றும்   துளசியால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக ஏழுமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாண்டுரங்கன் ரகுமாயி தாயாரை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *