Indhira vimanathil manakkula vinayakar

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 62 ஆவது பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அலங்கரிப்பட்ட விநாயகர் இந்திர விமானம் மூலம் திருவீதி உலா..

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 62 ஆவது பிரமோற்சவ விழா நடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை உற்சவருக்கு பால், தயிர், தேன்,மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது.

தொடர்ந்து தினந்தோறும் இரவு வெள்ளி வாகனம், யானை வாகனம், இந்திர விமான ம் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  அலங்கரிப்பட்ட மணக்குள விநாயகர் இந்திர விமானம் மூலம் திருவீதி உலா வந்தார். முன்னதாக கோவில் யானை லட்சுமி வர , விநாயகர் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *