Thiruverkadu therottam

திருவேற்காடு தேவி கருமாரியம்மன்  கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சென்னையை   அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.  தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர்  திருவிழா நடைபெறும்.  அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும்  சங்காபிசேகம் செய்யப் பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பால்வளத்துறை பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
 
சன்னதி தெரு, தேரோடும் வீதி என கோயிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டு  நிறைவாக கோயில் அருகே கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. இதில்  திருவேற்காடு பூந்தமல்லி மதுரவாயல் போரூர் மாங்காடு குன்றத்தூர் வானகரம் மற்றும் சென்னையின் பல்வேறு  பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *