aavani Sunday viradham

ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, உண்மை யான பக்தியுடன் உதயமாகும் ஸூர்யனைப் பார்த்து மும்முறை சொல்லி வந்தால், வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி எதிரிகளை வென்று சிறப்புடன் வாழலாம்.எதிரிகளை வீழ்த்தும்.

தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்

பூர்வாங்க ஸ்தோத்ரம்

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம்
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஷம்
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம்
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி

விளக்கம்: ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *