Sri manakkula vinayakar

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை  காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணக்குள விநாயகரை தரிசனம் செய்து சென்றனர். மேலும் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *