pillayarpatti rishaba vaganam

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஐந்தாம் திருநாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெரு விழாவை முன்னிட்டு கற்பக விநாயக பெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து தீப தூப ஆராதனை காண்பித்து  கோபுர தீபம் கும்ப தீபம் நாக தீபம் மற்றும் பல்வேறு தீப ஆராதனைகளும் பின்னர் வேத மந்திரங்கள் முழங்க உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து நிறைவாக மகா கற்பக தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கற்பக விநாயக பெருமானை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *