kadanai thiruppi selutha sirandha naal

சனிக்கிழமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க் கிழமை போன்ற நாட்களும் சிறப்பான பூஜை நாட்களே. இவற்றில் சுபமுகூர்த்த வைபவங்களைப் பொதுவாக வைப்பது கிடையாது என்றாலும், பிராயச்சித்த, பரிகாரங்களுக்கான நற்காரியங்களுக்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. 

களஞ்சியத்தில், பானையில், அரிசிப் பாத்திரத்தில் தானியங்களைச் சேர்ப்பதற்கு சனிக்கிழமை மிகவும் ஏற்புடையவையாகும். ஆயுள்காரக சக்திகளுடன் துலங்குவதாலும், சனீஸ்வரருக்கு மிகவும் ப்ரீதி உடையதுமான சனிக்கிழமை களஞ்சியச் சேகரிப்புக்கு மிகவும் ஏற்புடையதாகும்.

விதைகளை, வித்துக்களைச் சேகரிப்பதற்கும் சனிக்கிழமை ஏற்புடையதாகும். மேலும், கடனைத் திருப்பித் தந்து, பத்திரங்கள், நகைகளை, சொத்துக்களை மீட்பதற்கும் சனிக்கிழமையும், நவமித் திதியும் சிறப்பான நாட்களாகும். 

நமக்குத் தான் கடனே இல்லையே, நிலபுலன்கள் இல்லையே இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று எண்ணாதீர்கள். இவை எக்காலத்தும் குடும்பத்தை அண்டாத வகையில் காத்துத் தர வல்ல பூஜா பலன்களை சனிக்கிழமை தினம் குடும்பத்திற்கு நன்கு அளிக்க வல்லதாகும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *