thirupathy senior citizen

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோr ஏழுமலையான இலவசமாக தரிசிக்க ஆன்லைனில் டோக்கன்கள் வெளியீடு.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஏழுமலையானை இலவசமாகவும் எளிதாகவும் வழிபட அவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு ஒன்றை தேவஸ்தானம் செய்துள்ளது.

 கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த ஏற்பாட்டின் கீழ் அவர்களுக்கு இலவசமாக டோக்கன்கள் வழங்கப்பட்டு  தரிசனம் செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டோக்கன்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 நாள் ஒன்றுக்கு 1000 என்ற எண்ணிக்கையில் டோக்கன்கள் வெளியிடப்படும். டோக்கன்களை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தினமும் மாலை 3 மணிக்கு ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *