Aadi velli ammanai thuthikka padal

ஆடி வெள்ளியில் அம்மனை துதிக்க பாடல்…..

                               பல்லவி

        ஆடி வெள்ளியில் அம்பிகையே உனைப்
        பாடித்துதித்திடும் எனக்கருள் புரிவாய்

                            அனுபல்லவி

        கோடி வினை தீர்க்கும் கேசவன் சோதரியே
        ஆடிய பாதமவன் பங்கிலுறை சங்கரியே

                                சரணம்

        நாடியுன் பதம் பணியும் நல்லடியார் குறை தீர்க்கும்
        ஈடிணையில்லாத திரிபுர சுந்தரியே           
        வேடிக்கையாக மூவுலகும் காக்கும்       
        வாடிக்கையுடையவளே  வடிவுடைநாயகியே

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன. தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். 

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி கிருத்திகை:  ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும், ஆடி மாத கிருத்திகை நட்சித்திரம் மற்றும் அன்று இருக்கும் கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, சனிக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி ஆடி மாதம் 7-ம் தேதி வருகிறது. முருகனுக்கு உகந்த தினமென கூறப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *