veetil selvam sera eliya vazhimuraigal

ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும். சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும். வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.

மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும். சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும். பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும். வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.  ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும். தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *