siddhar mandiram

எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்க, எடுத்த காரியத்தில் தடைகள் அனைத்தும் நீங்க போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரத்தை உச்சரித்து வெற்றி பெறுங்கள். நரசிம்மர் மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் நம்மிடம் துர் சக்திகளை  அண்டவிடாமல் சகல சவுபாக்கியங்களையும்  வழங்கும் என்பது உறுதி.

இத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை நமக்கு அருளியது புலிப்பாணி சித்தர்.

மந்திரம்…

“பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு
பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே
ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க
ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா”

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளும் துர்சக்திகளும் அழிந்து விடும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *