thirupathy ezhumalayan dharshan sirappu erpadu

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தபோது, பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

வரும் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் அதிகளவான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். மேலும், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர மோர், குடிநீர், மருத்துவ வசதிகளை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில் நான்கு மாடவீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிங் பெயிண்ட், சிகப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேய சுவாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் விரைவில் பக்தர்களுக்கு கிடைக்க செய்யப்படும். இது தேவஸ்தான இணையதளத்திலும் பக்தர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *