thirupathy bakthargalukku arivippu

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், "புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ஆம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.60 கோடி ரூபாயில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்காக மகாராஷ்டிர அரசு 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோவில் கட்ட முன்வந்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *