Shree dhanvanthri ashtanaga kal garudar poojai

16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு மண்டல பூஜையுடன் ஹோமங்கள், வருகிற 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறுகிறது

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சென்ற  6.2.2022 ஞாயிற்றுக்கிழமை 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு வருகிற 27.3.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜைடன் ஹோமங்கள் மற்றும 9 வகையான திரவியங்களை கொண்டு மூலவர் ஸ்ரீ கருட தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

கருட தன்வந்திரி வழிப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்

கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.  சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத்தடை, பூமி தோஷம், வாகனத்தடை, குடும்பத்தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியமும் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் நீங்கி எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீ கருட தன்வந்திரி விஷேச திரவியங்களைக் கொண்டு நவக்கலச திருமஞ்சனம் மற்றும் விலை உயர்ந்த மூலிகைகள் கொண்டு நடைபெறும் ஹோமங்களிலும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *