iravu thoongum mun seiya vendiyavai

ஒவ்வொருவரும் இரவு தூங்க செல்லும் முன் இந்த சில விஷயங்களை மட்டும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் பண ரீதியான பிரச்சனைகள், மன ரீதியான பிரச்சனைகள், கடன் தொல்லைகள் அனைத்தும் எளிதாக நீங்கும்.

எப்பொழுதும் இரவு தூங்க செல்லும் முன்பு சிறு துண்டு வெல்லத்தை வாசலில் ஒரு ஓரமாக வைத்து விட்டு தூங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்து பார்த்தால் அந்தப் வெல்லம் அப்படியே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் தீரப் போவதில்லை என்பது அர்த்தம். வெல்லம் காணாமல் போய் இருந்தால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகப் போகிறது என்பதை உணரலாம். வெல்லத்தை சாப்பிட வரும் எறும்புகளும், மற்ற உயிரினங்களும் உங்களுடைய பாவ கணக்குகளை எடுத்துக் கொள்கின்றன.

பூஜை அறைக்கு சென்று முதலில் விளக்கை குளிர்வித்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அதே போல பூஜை அறையை தூங்கச் செல்லும் முன்பு மூடி வைக்க வேண்டும். பூஜை அறை கதவு இல்லை என்றால் அதன் திரையை நீங்கள் மூடி வைத்து பின்னர் தூங்கச் செல்ல வேண்டும்.

வீட்டின் சமையலறை என்பது நம் வறுமையைப் போக்கும் அன்னபூரணி நிறைந்து இருக்கும் ஒரு அம்சமாகும். எனவே தூங்க செல்லும் முன்பு சமையலறைக்கு சென்று அங்குள்ள அடுப்பு மற்றும் அடுப்பு வைத்திருக்கும் மேடை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கக் கூடாது. எழுந்ததும் அதற்கு குங்குமப் பொட்டிட்டு சமையலை ஆரம்பித்தால் வறுமை என்பதே ஏற்படாது.

தூங்க செல்வதற்கு முன்னர் கட்டாயம் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பங்கரையில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே போல ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதனால் பசியோடு வரும் அன்னபூரணி நம்மை வாழ்த்திவிட்டு செல்வார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

பணம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் முன்பு ஒற்றைப்படை எண்ணிக்கையில் அதாவது 1, 3, 5 போன்ற எண்ணிக்கையில் கிராம்புகளை ஒரு அகல் விளக்கில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கற்பூரத்தை வைத்து கிராம்புடன் கற்பூரத்தையும் சேர்த்து எரியவிட வேண்டும். இதன் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருக்கும், மறுநாள் காலையில் எழும் பொழுது நிச்சயம் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்குவார் என்பது நம்பிக்கை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *