thai amavasai idhai seiyakudahthu

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும்போது எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

மேலும் தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடமிருந்து கடனாக வாங்கக் கூடாது. அதேபோல் கரையிலிருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக் கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

தை அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

காகத்துக்குச் சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

துளசி மாலை :

முன்னோர்களுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்குத் துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம். எனவே தை அமாவாசையன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். நமக்கு விஷ்ணு மற்றும் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *