Dhosham neekum thai amavasai

பித்ரு  பூஜையின்போது  விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.  இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.    குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும்.  பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும்.

பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

எல்லா  பித்ரு  பூஜை  சமயத்திலும்  இதை  செய்ய  முடியாவிட்டாலும்,  அவர்கள்  இறந்த  திதி,     தை அமாவாசை,  ஆடி  அமாவாசை,  மஹாளய  அமாவாசை  ஆகிய நான்கு நாட்கள்  மட்டுமாவது    விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால்  நல்லது.

பித்ரு  பூஜை  தர்ப்பணம்  திலதர்பணபுரி,  ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி   போன்ற  கோவில்களிலோ,  நீர் நிலை உள்ள பகுதிகளிலோ செய்யலாம்;  வீட்டிலும்  செய்யலாம்.

தை அமாவாசையில் அதிகாலை எழுந்து நீராடி விட்டு, சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், அன்னதானம் செய்தால் மிகவும் நன்மை அளிக்கும். அமாவாசை நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் அவருடைய அருளையும் பெறலாம்.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *