Sangadam theerthu chatru samhara homam

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு தினமும் தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம் மற்றும் ஏராளமான சிறப்பு ஹோமங்கள் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசையுடன் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 23.01.2022  ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும், சங்கடங்கள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும்  ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது.

ஹோமங்கள் எதற்காக செய்யப்படுகின்றன :

பொதுவாக ஹோமங்கள் இறைவனுடைய அருளை பெறுவதற்க்கும், இழந்த ஒன்றைத் திரும்பப் பெறுவதற்கும், முறையாக வர வேண்டியதை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக வாய்ப்பு, மன மகிழ்ச்சி, குடும்ப க்ஷேமம், குழந்தைகளின் கல்வி, போன்ற பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி செய்யப்படுவதாகும்.

 நம்பிக்கை வைக்க வேண்டும் :

 எல்லாவற்றுக்கும் மனம் ஒன்ற வேண்டும். மருத்துவரிடம் போனால் அவர் தருகிற மருந்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். குருவிடம் போனால் அவர் சொல்லித் தருகிற மந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல் ஒரு ஹோமம் செய்கிறீர்கள் என்றால், முதலில் நம்பிக்கை வேண்டும். இந்த ஹோமத்தை நாம் செய்தால், நிச்சயம் நாம் வேண்டுவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செய்ய வேண்டும்.

ஷஷ்டியின் சிறப்பு :

விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும். அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் சஷ்டி விரதம் ஆகும்.

 சஷ்டி விரதத்தின் பலன்:

 இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு அமையவும்,  கடன் தொல்லை நீங்கவும் மேற்கண்ட யாகம் நடைபெறவுள்ளது.

 "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம்.

 கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. கார்த்திகைப் பெண்களுக்கு இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலும், வளர்ப்புத் தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால் கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் கார்த்திகை குமரன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.

சத்ரு ஸம்ஹார ஹோமத்தில் பங்கேற்று கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்தும் சத்ரு உபாதைகளில் இருந்தும் நிவாரணம் பெற வேணுமாய் பிராத்திக்கின்றோம். மேலும் அரசு வழிகாட்டுதல் படி யாகங்கள் பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,
இராணிபேட்டை மாவட்டம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *