dhanvanthri newyear homam

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது. 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 1.1.2022 சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை கீழ்க்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

1.   நக்ஷத்ர தோஷங்கள் நீங்க – நக்ஷத்திர சாந்தி ஹோமம்.

2.  எதிரிகள் விலக – மஹா சுதர்சன ஹோமம்.

3.  ஆயுள் பயம் நீங்க – ஆயுஷ் ஹோமம்.

4.  நீண்ட ஆயுள் பெற – மஹா தன்வந்திரி ஹோமம்.

5. வாழ்வில் வளம் பெற – குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

 யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் :

 ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், தொழில் வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த யாகங்களில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும்  பங்கு கொண்டு நக்ஷத்திர தோஷம், ஆயுள் தோஷம், பயம், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று ஆங்கிலப் புத்தாண்டில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *