Sukran gayatri mandiram

சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் "அமிர்த சஞ்சீவி' மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். 

சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும். சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். 

ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். 

சுக்கிரன் (தடைபட்ட திருமணம் நடக்க)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *