Srirangam vaikunda egadasi nirivu

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வைகுண்டஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார்மோட்சத்துடன் நிறைவுபெற்றது.

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு இந்த வருடம் நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு  2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி  நடைபெறும்.

பகல் பத்து – ராப்பத்து ஆகிய திருவிழாக்களிலும் மூலஸ்தான புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 8மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு கடந்த  டிசம்பர் 14 -ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு நடைபெற்றது.

இராப்பத்து திருநாளின்போது  9-நாட்கள் தினசரி திறக்கப்பட்டுவந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8-மணியுடன் மூடப்பட்டது. 21 நாள் திருவிழாவின் நிறைவு நாளான இன்று  நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *