Jadagam sixth place

ஒவ்வொரு ராசியினுடைய ஆறாம் வீடு ரண ருண ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படும். 

ஒவ்வொருவருடைய மன சம்பந்தமான வலி – உடல் சம்பந்தமான வலி – ஆரோக்கியம் – கடன் போன்றவைகளை நாம் ஆறாமிடத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை நாம் பார்க்கலாம். 

ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால் வெப்பம் சம்பந்தமான விஷயங்கள் வெப்பநோய் சம்பந்தமான விஷயங்களும் அரசு சார்ந்த கடன்களும் இருக்கலாம். 

சந்திரன் இருந்தால் நீர் சம்பந்தமான பிரச்சினைகளும் சீக்கிரமே அடையக்கூடிய கடனும் இருக்கலாம். செவ்வாய் இருந்தால் ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூமி சம்பந்தமான கடனும் இருக்கலாம். இவர்களுக்கு மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும். 

புதன் இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் பணம் சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கலாம். 

குரு இருந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் தெய்வ கடன் சம்பந்தமான விஷயங்கள் இருக்கலாம். 

சுக்கிரன் இருந்தால் மறைவிடங்களில் பிரச்சினைகளும் – கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கலாம். 

சனி இருந்தால் முழங்கால் முழங்கை இடுப்பு சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் பூமியை சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் இருக்கலாம். 

ராகு இருந்தால் முகம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூர்வீக வழியில் சொத்துக்கள் பிரச்சினைகளும் இருக்கலாம். 

கேது இருந்தால் ஞாபக மறதி சம்பந்தமான விஷயங்களில் சிறிது இறக்கங்களும் கையிருப்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *