Veetil santhosham nilaikka deepam

நல்லெண்ணெய்: தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவக்கிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.

விளக்கெண்ணெய்: விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.

நெய்: நெய்யால் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

24 மணிநேரமும் விளக்கு எரியலாம். முடியாதவர்கள் காலை 6ல் இருந்து 7க்குள் விளக்கு ஏற்றி மதியம் 12 க்குள் மலர் கொண்டு குளிர்விக்க பின் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி உறங்கும் முன் அல்லது இரவு 9 மணிக்கு மலர் கொண்டு குளிர்விக்கலாம். அவ் வீட்டிற்க்குறிய பெண் அல்லது ஆண் ஏற்றலாம். தீபத்தை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் செவ்வாய் வெள்ளியாவது ஏற்றிட  நன்மை பயக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *