Sirappu parigaram

சூரியன் எனில், ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு செந்தாமரை மலர் அணிவித்து, கோதுமை, அவல், கேசரிஇனிப்பு, கேரட் சேர்த்த அன்னம் மற்றும் ஆப்பிள் படையலிட்டு பூஜை செய்ய வேண்டும். 

சந்திரன் எனில் திங்கட்கிழமை பைரவருக்கு அல்லிமலர் மாலை அணிவித்து, ஜவ்வரிசி பாயாசம், முள்ளங்கி சேர்த்த அன்னம், சாத்துக்குடி ஆகியவற்றை படைத்து பூஜிக்க வேண்டும். 

செவ்வாய் எனில் செவ்வாய்க்கிழமை பைரவருக்கு செண்பக மலர் மாலை சாத்தி, ஜிலேபி, பீட்ரூட், அல்லது துவரம் பருப்பு சேர்த்த அன்னம், மாதுளை பழம் படைத்து பூஜிக்க வேண்டும். 

புதன் எனில் புதன்கிழமை வைரவருக்கு மருள் அல்லது மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயாசம், பாசி பருப்புப் பொடி கலந்த அன்னம், கொய்யாப்பழம் படைத்து பூஜிக்க வேண்டும். 

குரு எனில் வியாழக்கிழமை பைரவருக்கு முல்லை மலர் மாலை அணிவித்து, வேகவைத்த பருப்பு, சர்க்கரையும் கலந்து செய்த உருண்டையும், கடலைப்பருப்பு வறுத்த பொடி கலந்த அன்னமும், ஆரஞ்சும் படைத்து பூஜிக்க வேண்டும். 

சுக்கிரன் எனில் வெள்ளிக்கிழமை பைரவருக்கு வெண் தாமரை மலர் மாலை சார்த்தி, சேமியா பாயாசம், சாம்பல் பூசணி, பருப்பு சாம்பார் கலந்த அன்னமும், மாம்பழமும் படைத்து பூஜிக்க வேண்டும். 

சனிபகவான் எனில் சனிக்கிழமை பைரவருக்கு எள்ளுருண்டையும், பாகற்காய் மற்றும் கருவேப்பிலை பொடி கலந்த அன்னமும், கரும் திராட்சையும் படைத்து பூஜிக்க வேண்டும். 

ஒன்பதாம் இடத்தில் தோஷத்திற்கு உரிய கிரகமான ராகு அமர்ந்தால் சனிக்கிழமை பைரவருக்கு மந்தாமரை அல்லது நீலநிற மலர்மாலை சார்த்தி,உளுந்து கஞ்சியும், உளுந்து பொடி கலந்த அன்னமும், வாழைப்பழமும் படையலிட்டு பூஜிக்க வேண்டும். 

கேது அமர்ந்தால் செவ்வாய்க்கிழமை பைரவருக்கு செவ்வரளி மலர்மாலை சார்த்தி, வேகவைத்த கொள்ளும், சர்க்கரை கலந்த உருண்டையும், கொள்ளுப்பொடி கலந்த அன்னமும், விளாம்பழம் அல்லது வில்வபழம் படையலிட்டு பூஜிக்க வேண்டும். 

இவ்வாறு செய்து வந்தால் பிதுர் தோஷம் நீங்கி வாழ்க்கை வளம் நிறைந்ததாக மாறும் இது அனுபவத்தில் கண்ட உண்மை. நீங்களும் செய்து பலன் அடையுங்கள். மேலும் வியாபார தடை, வறுமை துன்பம் நீங்க, பைரவர் வசிய யந்திரம் மற்றும் மூலிகை வசிய மை குறைந்த விலையில் செய்து தருகிறோம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *