Suba horai endral enna

ஒரு  HORA என்பது ஒரு  HOUR ஆகும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை ஒவ்வொரு மணி நேரமும் நவகிரகங்களில் ராகு கேது தவிர வேறு கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட  அமைப்பில் அந்த நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  இந்த சுப ஹோரை என்பது குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஞாயிற்றுக்கிழமை உள்ள 24 மணி நேரமும் இந்த வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது முதலாவது காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு சுக்கிர ஹோரை என்று வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது .

 ஞாயிற்றுக்கிழமை வரும் வரிசை :

சூரியன், சுக்கிரன் ,புதன் ,சந்திரன் ,சனி பகவான், குரு பகவான் ,செவ்வாய் இவை ஏழு ஹோரைகள் .ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் ஏழு மணிநேரம் இந்த வரிசையில் ஹோரை வரும். அதற்குப் பின்னர் இதே வரிசையில் அடுத்து 7 மணி நேரம் அதாவது மதியம் ஒரு மணி முதல் 8 மணி வரை சுப ஹோரை வரும் .

பின்னர் இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 3 மணி வரை இந்த வரிசை தொடரும். பின்னர் சூரியன் ,சுக்கிரன் ,புதன் ஓரைகள் காலை 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று  சுப ஹோரைகள் முடிந்து திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திர ஹோரை ஆரம்பமாகும் .இதுதான் ஒருநாளில் உள்ள ஹோரையின் அமைப்பு ஆகும் இவ்வாறு ஏழு நாட்களும்  சுபஹோரை கணிக்கப்படுகிறது.

காலையில் 6 மணி முதல் 7 மணி வரை எந்த சுப ஹோரை ஆரம்பம்  ஆகிறதோ அந்த நாளின் பெயர்  கொண்டு கிழமை அமைகிறது. இவ்வாறுதான் ஒரு வாரத்தில் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்ற கிழமைஅமைப்பு நமது முன்னோர்களால் கொடுக்கப்பட்டுள்ளது .

சூரிய உதயம் ஒரு இடத்தில் காலை 6 மணி என்ற முறையில் சுபஹோரை கணிக்கப்பட்டுள்ளது ஒரு இடத்தின் சூரிய உதயத்தை கொண்டு இந்த முறையின் கால அளவு சிறிது மாறுபடும். சந்திரன் ,புதன் ,குரு, சுக்கிரன் ஆகிய சுப ஹோரைகள் ….நல்ல செயல்களை செய்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள  மூன்று  ஹோரைகள் சூரியன் ,செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின்  ஹோரைகளை  நல்ல செயல்கள் செய்வதற்கு தவிர்க்க வேண்டும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *