Sri Sai Mandiram

இந்த பூவுலகில் மனித உருவெடுத்த மகானாக வணங்கப்படுகிறார் ஷீரடி சாய்பாபா. மதங்களை கடந்த ஒரே கடவுளாக இன்று மக்களிடைய நிலைத்திருக்கும் இவரை வணங்கினால் அருளாசி நிச்சயம் கிடைக்கும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருந்து இன்று பல பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இப்படி பக்தர்களை இமைப்போல காக்கும் சாய்பாபாவை வணங்கி சாய்பாபா மகா மந்திரத்தை மனதார ஜெபிப்போருக்கு வெற்றி நிச்சயம்.

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

இந்த மந்திரத்தின் பொதுப்பொருளானது உலகின் மூல ஓசையான ஓம் இந்த வார்த்தை கரடு முரடான மனதை கூட ஆழ் நிலை தியான நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரே மூல மந்திரம் ஓம்..

ஸ்ரீ என்ற வார்த்தைக்கு திரு என்று பொருள் தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ!

ஜெய..ஜெய..என்பது வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய…!

சாயி என்பதன் பொருள் அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி உலகின் பொது கடவுள் என் பல அற்புத பொருள்களை கொண்ட சொல் சாயி…!

நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை அவருக்கு உகந்த வியாழக்கிழமைகளில் உச்சரித்தால் எண்ணியவை யாவும் ஈடேறும், சாய்பாபவின் அருளும் ஆசியும் என்றென்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *