Garuda Gayathri mandiram

கருட  பஞ்சமி  அன்று கருடனை நோக்கி  விரதமிருக்க  காலையில்  எழுந்து நீராடி  வீட்டில்  கருடனுடன்  கூடிய மகாவிஷ்ணு  படம்  வைத்திருந்தால் அவற்றை  வைத்து துளசி தீர்த்தம் காய்ச்சாத பசும்பால்  மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நைவேத்தியங்களை படைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும்! சகல  சவுபாக்கியங்களையும் பெறலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணைவார்கள். மேலும்  குடும்பத்தில்  இருக்கும்  சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பகைவர் தொல்லை  ஒழியும்   எமபயம்  நீங்கும் வருமானம் உயரும்  புத்திர பேறு உண்டாகும்.

 கருட காயத்திரி மந்திரம்: 
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்!

கருட மந்திரத்தை தூய்மையான மனதுடன் ஜபம் செய்வதன் மூலம் ராகு அல்லது கேது குறைபாடுகள் காரணமாக வரும் கெடுபலன்கள் குறைந்து சகல சௌபாக்யங்கள் கிடைக்கும்.

ஸ்லோகம்: 

ஸ்ரீ காருண்யாய கருடாய வேதரூபாய வினதா புத்ராய விஷ்ணு பக்திப்ரியாய அம்ருத கலஸ ஹஸ்தாய பஹூபராக்ரமாய பக்ஷி ராஜாய சர்வ வக்ர நாஸநாய சர்வதோஷ ஸர்ப்பதோஷ விஷஸர்ப்ப விநாஸநாய ஸ்வாஹா.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *