Thirumal nanagu gunagal

திருமாலுக்குரிய குணங்களாகக் கூறப் பெறுவனவற்றுள் நான்கு குணங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுபவை. அவையாவன ,

1. வாத்சல்யம்

2. சுவாமித்துவம்

3. சௌசீல்யம்

4. சௌலப்யம்

1.  வாத்சல்யம்

வாத்சல்யம்_என்பது_கன்றிடம்_தாய்ப்பசு_கொள்கிற_அன்பாகும்_திருமாலுக்குரிய_இக்குணம்_கண்ணன்_அவதாரத்திலே_மிகுதியாக_வெளிப்படுகிறது. குசேலரிடத்திலும் பாண்டவர் மற்றும் திரௌபதியிடமும் மிகுதியாகக் காட்டினார். அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் அவனது குற்றம் நோக்காது உண்மைப் பொருளின் சிறப்பை உணர்த்திய திறத்தால் அவனுடைய வாத்சல்ய குணம் விளங்குகிறது.

2.  சுவாமித்துவம்

சுவாமித்துவம் என்பது கடவுளர்க்கெல்லாம்_தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவது. இச்சிறப்பு அனைத்து அவதாரங்களிலும் வெளிப்பட்ட போதிலும் கண்ணன் அவதாரமே அத்தகைய சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை உரைக்கையில் தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டாக அர்ச்சுனனுக்கு பரத்துவத்தை விளக்கியமையால் இக்குணத்தின் சிறப்பு விளங்குகிறது.

3.  சௌசீல்யம்

சௌசீல்யம் என்பது ஏற்றத்_தாழ்வின்றி_உயர்ந்தவன்_தாழ்ந்தவன்_என்ற_பாகுபாடின்றி_கொண்டிருக்கும்_நட்பைக்_குறிப்பது. இக்குணமும் கண்ணனுக்கு மிகுதியாக இருந்தது.

4.  சௌலப்யம்

சௌலப்யம் என்பது இறைவனின்_எளிமை நிலையைக் குறிப்பது. உலக மாயைக்குக் கட்டுண்ணாத திருமால் மனித வடிவில் வந்து தன் உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய நிலையே எளிமைக்கு எடுத்துக்காட்டாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *