thirupathy august dharshan ticket

ஆந்திரா மாநிலத்தில் புதிய தளர்வுகள் அமலானதால் வரும் ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலயானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட்கள் வரும் 20ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியாகிறது. தற்போது ஆன்லைன் வாயிலாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் பெற்று வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 8ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு மணி நேரத்திற்கு தளர்த்தி ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் முந்தைய மாதமே தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் வரும் 20ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அதிகாரி கே.எஸ். ஜவகர் ரெட்டி, சனாதன இந்து தர்மத்தை இளைஞர்களிடம் விதைக்கும் வகையில் தேவஸ்தான தர்ம காரியங்கள் கிராம அளவிலும் மேற்கொள்ளப்படும். நமது வேதங்களும், இதிகாசங்களும் சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *