Graha dhoshangal agala ko poojai

பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். மேலும் கிரக தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் அகல எளிய வழிபாடு கோ பூஜை தான். நம்மால் இயன்ற பொழுதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் உணவு கொடுக்கலாம். இதனால் நம்முடைய கர்ம வினைகள், முன்னோர்களின் சாபங்கள் நீங்கி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் 

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.

அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது. கோ பூஜை செய்வதால் பணக்கஷ்டம் தீரும். மணப்பேரும் மழலை, வரமும் கிடைக்கும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *