Sree Panchayudha stothiram

திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். திருமாலின் திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும். எதிரிகள் சக்தியிழப்பர்.

சுதர்சனம் – சக்கரம்
ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே! 

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,  கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன் என்பது இந்த ஸ்தோத்திரத்தின் பொருள். இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள். நல்லதே நடக்கும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *