Thulasi poojai kidaikum palangal

எவர் தன்னை பூஜை செய்கின்றனரோ அவருக்கு என்ன பலன் வந்து சேரும் என்பதை துளசியே சொல்கின்றாள்;

அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து மண்ணின்மேல் நட்டு மகிழ்ந்து நல் நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க; மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்.

"மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள் தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன், அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன், தரிதிரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன், புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன், கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்.

கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன், மும்மூர்த்திகள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்,  கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி கங்கைக்கரை தன்னில், கிரகண புண்யக் காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன். சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே, "அப்படியே ஆகுமென" திருமால் அறிக்கை இட்டார். இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடிவார்  பிருந்தையின் அருளால்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *