Nava graha sloham

சூரியன்  முதல்  ஒன்பது  கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை  இந்த  ஒரு ஸ்லோகத்தைபடிப்பதால்  அடையலாம்.  ஒன்பது  கிரகங்களில்  ஏதாவது ஒரு கிரகம் கெட்ட  இடத்தில்  இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்திகள் நேர்ந்தாலும்  இந்த ஸ்லோகத்தை  ஒன்பது  தடவை  படித்து  ஒவ்வொரு முறை  நமஸ்காரம்  செய்யவும்.

ஸ்லோகம்….

ஆரோக்யம் ப்ரதாது தினகர
சந்த்ரோ யசோநிர்மல
பூதிம் பூமி ஸூத 
ஸூதாம் ஸூதயை
ப்ரஜ்ஞாம் குருர்  கௌரவம்  கான்ய 
கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா  
ராஹூர் பாஹூபலம்  விரோத ஸமனம்   
கேது குலஸ்யோன்னதிம் !!   

ஸ்லோகத்தின் பொருள்…

ஆரோக்யத்தை  சூர்யனும்  
சுத்தமான  கீர்த்தியை சந்திரனும்  
ஐஸ்வர்யத்தை  அங்காரகனும்  
நல்ல புத்தியை  புதனும் 
நல்ல மதிப்பை பிரஹஸ்பதியும்  
இனையற்றதும் அழகியதுமான பேசும்   திறமையை  சுக்கிரனும்  
எப்பொழுதும் ஸந்தோஷத்தை  சனைஸ்  சரனும்  பலத்தையும்   
சத்ரு நிக்ரஹத்தையும்  ராஹூ பகவானும்  
குலத்தின்  அபிவிருத்தியை  கேதுவும்  நம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்  

சுபம். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *