Veetil Panam Sera

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இந்த எளிமையான பரிகாரங்களை செய்தோமேயானால் அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது காலை 9 மணிக்குள் ஆடியில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்த பரிகாரம் செய்யவேண்டும். ஒரு சிறிய சிவப்பு துணியில் 2 வெற்றிலை, 1 கொட்டைப்பாக்கு , 2 கிராம்பு , ஒரு துண்டு பச்சைக்கற்பூரம், 1 பூசு மஞ்சள் (கிழங்கு மஞ்சள் ), 4 உதிரி மல்லிகைப்பூ இருந்தால் வையுங்கள்.

இல்லையெனில் சிவப்பு துணியில் ஜவ்வாது தேய்த்து அதனுடன் 1 ரூபாய் நாணயத்தையும் வையுங்கள்.பின் மஞ்சள் பூசிய கயிற்றால் மூட்டை போல் கட்டி தூப தீபங்களை காட்டி பணப்பெட்டியில் வையுங்கள்.மறுவாரம் வியாழக்கிழமை இரவு அந்த மூட்டையை பிரித்து 1 ரூபாய் நாணயத்தை மட்டும் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள்.

மஞ்சளை பூசுவதற்கு பயன்படுத்துங்கள். மீதியுள்ள பொருட்களை ஓடும் நீர் அல்லது கால் அடி படாத இடத்தில் மண்தோண்டி புதைத்துவிடுங்கள்.இதே போல் ஆடியில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் முதல் நாள் வெள்ளிக்கிழமை செய்த அதே நேரத்தில் செய்யுங்கள். பலன் நிச்சயம் கிடைக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *