Palani golden car

பழனி முருகன் கோவிலில் மலைமீது 11 மாதங்களுக்கு பிறகு தங்கதேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோயிலில் மலைமீது நடைபெறக்கூடிய தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி  ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 11 மாதங்களாக  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சியை துவங்க பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

அதன்படி திங்கட்கிழமை மாலை மலை மீது சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பிறகு தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்னகுமாரர் தங்கத் தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி கருதி வழிபட்டனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *