kuthu vilakkupoojai

சீர்காழியில் 108 வைணவ தலங்களில் ஒன்றான திரு விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தை மாத கடை  வெள்ளியை முன்னிட்டு லோகநாயகி தாயார் சன்னதி முன்பு 200க்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும் குடும்பத்தில் நன்மை வேண்டியும் குத்து விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *