Theeya Shakthigalai virattum parigaram

நம் வீட்டில் காரணமின்றி சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்பட வீட்டில் நம்மால் உணர முடியாத தீய அதிர்வுகள் நிறைந்திருப்பதே காரணம் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதை கேட்டிருப்போம். 

இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஆன்மீகப்படி பரிகாரமுறை  உள்ளது. 

தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை  பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மேற்கண்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான தீய சக்திகள் அனைத்தும் விலகி விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை நாம் காணலாம்.
 
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *