Anjaneyarai vazhipada ugandha natkal

அறிவு, உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆஞ்சநேயர். 

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா  நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
 
ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபட்டாலும், ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல  பலன்களை தரும்.
 
முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைத்தன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என  நம்பப்படுகிறது.
 
பக்தியோடு படிக்க வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரம்:
 
“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமிகி ஹனுமதே லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *