Thirukollikodu sani peyarchi

திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில்  சனிப்பெயர்ச்சி விழா அதிகாலை 5.22மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி செய்தார் இதையொட்டி சனிபகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடி உடனுறை கொள்ளிகாடார் திருக்கோவிலில் அமைந்துள்ள பொங்கு சனீஸ்வரர் பகவானுக்கு என தனி சன்னதி தென்னிந்தியாவிலேயே இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது .

இன்று  அதிகாலை  சனி பெயர்ச்சி விழா காலை 5:22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி செய்தார் .

மேலும் பரிகாரம் செய்யக்கூடிய ராசிகளான மிதுனம், துலாம், தனுசு ,மகரம், கும்ப ராசிக்காரர்கள் சிறப்பு பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் நாளை காலை5.22 மணிக்கு நடைபெறக்கூடிய சனி பெயர்ச்சி விழாவில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை .
 
காலை 7 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனைக செய்யப்பட்டு  முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்து குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது .பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *