TV Malai Deepam pandakal

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ராஜகோபுரம் முன்பு இன்று அவிட்ட நட்சத்திரம் கன்னியா லக்னத்தில். திருக்கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது..

இன்று முதல் பூர்வாங்க பணிகள் திருக்கோவிலில் நடைபெறும். வருகின்ற நம்பர் மாதம் 20ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

நிறைவு நாளான நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை திருக்கோவிலில் உள்ள கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *