Temple Rules

தமிழகத்தில் உள்ள மத வழிப்பாட்டு தலங்கள் மீண்டும் நாளை முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அற நிலையத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை அதற்காக  ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்களே வைத்து மீண்டும் எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கா வரும் பக்தர்கள் அனைவரும் வெப்ப நிலை பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வெப்ப நிலை அதிகமாக உள்ள பொதுமக்களுக்கு கோயிலினுள்  அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *