Aadi 18 Naal

ஆடி மாதத்தின் முக்கிய நாளாக போற்றப்படும் ஆடி 18-ஆம் தினத்தன்று புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை மேற்கொண்டால் வளம் பெருகும் என்பது அருளாளர்கள் வாக்கு. 

மேலும் இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. 

மேலும் வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை. 

வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *